இந்திய சகோதரர்கள் ஐக்கியம் என்பது அங் மோ கியோ தமிழ் மெதடிஸ்ட் திருச்சபையின் சமூக முன்முயற்சியாகும். 2007ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மதிப்புமிக்க வாழ்க்கைத் திறன்களை வழங்கும் நோக்கோடு தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் ஆங்கில உரையாடல், அடிப்படை கணினி மற்றும் ஆட்டோகேட் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இந்த வகுப்புகள் மூலமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். வகுப்புகள் மட்டுமல்லாது மாணவர்கள் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றலா மூலம் மாணவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.