வெறும் வகுப்புகள் மட்டும் தான் என்பதல்ல. மாணவர்களை ஊக்கிவிப்பதற்காக வருடந்தோறும் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. குறிப்பாக, மேதினமென்றால் கொண்டாட்டம் தான். அன்றைய நாள் முழுவதும் வெளிவிளையாட்டு மற்றும் உள்விளையாட்டு இரண்டிலும் மாணவர்கள் மகிழ்ச்சியில் நிறைக்கப்படுவார்கள். வருடத்திற்கு ஒருமுறை மாணவர்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரு சுற்றுலா தளத்திற்கும் அழைத்துச்செல்லப்படுகிறார்கள்.