சிங்கப்பூரில் வாழும் இந்திய புறம்பெயர் தொழிலாள தோழர்களுக்காக நம் வகுப்புகள் அனைத்தும் பிரத்யேகமாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ஞாயிறுக்கிழமைகள்தோறும் மாலை 7.00 மணிக்கு அங் மோ கியோ தமிழ் திருச்சபை வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும்.
அதுமட்டுமல்ல. நீங்கள் வேலைப்பளுவின் மத்தியில் வந்து வகுப்புகளில் பங்குபெறுவதால், இரவு உணவும் வழங்கப்படும். நம் மாணவர்கள் சிலர் அவர்கள் வாகனங்களை எடுத்து வருவதால், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் பகுதிகளில் உள்ள மாணவர்கள், அந்த வாகனங்களிலே வந்து செல்லலாம்.
முக்கியமாக இவையனைத்திற்கும் கட்டணம் எதுவும் கிடையாது; முற்றிலும் இலவசம்.
கீழ்கண்ட வகுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. உங்கள் ஆசிரியர்கள் உங்கள் தேவைக்கேற்ப வகுப்புகள் வடிவமைப்பார்கள். யாருமே விட்டுச்செல்ல படமாட்டார்கள். மேலும் தகவலறிய, பின்வரும் பகுதிகளை கிளிக் செய்யவும்:
- Spoken English - தமிழ்வழி ஆங்கிலம் கற்றல்
- Basic Computer - தமிழ்வழி கணினி கற்றல் - குறிப்பாக மற்றும் கற்றுக்கொள்வோம்
- AutoCAD 2D and 3D - தமிழ்வழி ஆட்டோகேட் 2டி மற்றும் 3டி வரைபடங்கள் வரைவதை கற்றல்
நம்மில் பலர் வெவ்வேறு சூழ்நிலை காரணமாக நம் பள்ளி காலங்களில் ஆங்கிலத்தை முறையாய் கற்க முடியாமல் போயிருக்கும். ஆனால், சிங்கப்பூரில் வாழும் நாட்களில் ஆங்கிலம் மிகவும் இன்றியமையாததாக போய்விடுகிறது. ஆதலால், நம்முடைய தமிழ்வழி-ஆங்கில வகுப்புகள், நீங்கள் உங்கள் வேலையிடத்தில் சரளமாக பேசும் நோக்கோடு அமைக்கப்பட்டுள்ளது.
வகுப்பில் அடிப்படை இலக்கணம், வாக்கிய அமைப்பு, கேள்வி-பதில் அமைத்தல் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிப்பது ஆகியவை சொல்லிக்கொடுக்கப்படும். மாணவர்களுக்கு அவ்வப்போது பயிற்சி கைபிரதிகளும் வழங்கப்படும்.
இந்த காலகட்டங்களில் கணினி நம் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பகுதியாய் மாறிவிட்டது. நம்மில் பலருக்கு, கணினி திறன் நம் வேலையிடத்தில் நமக்கு மிகவும் தேவையானதாய் அமைந்துவிடுகிறது.
நம் கணினி வகுப்புகளில் முக்கியமாக Microsoft Word, Microsoft Excel மற்றும் Microsoft PowerPoint கற்றுக்கொடுக்கிறோம். வகுப்புகள் தொடர்ந்து 24 வாரங்கள் நடைபெறும். அவ்வப்போது பயிற்சி தேர்வும் நடத்தப்படும். உங்கள் வேலையிடத்தில் நீங்கள் கணினியை திறம்பட இயக்கவெய்ப்பதே எங்கள் நோக்கம்.
அதுமட்டுமல்ல, போஸ்டர் மற்றும் வாழ்த்து அட்டைகள் வடிவமைப்பது, உங்களுடைய Resume தயார் செய்வது, வங்கிக்கணக்கு இயக்குவது ஆகியவை சொல்லிக்கொடுக்கப்படும்.
நம்மில் பெரும்பாலானோர் கட்டுமான துறையில் வேலை செய்வதால், ஆட்டோகேட் தெரிந்து வைத்துக்கொள்வது உதவியாக இருக்கும். AutoCAD மென்பொருள் மூலமாக, 2D மற்றும் 3D வரைபடங்களை எளிதில் வரையமுடியும். அதுமட்டுமல்ல, நம் வேலையிடத்தில் ஒருவேளை ஏற்கனவே வரையப்பட்டுள்ள வரைபடங்களை நாம் எளிதில் புரிந்துகொள்ளவும் அதை மாற்றியமைக்கும் நம்மால் முடிகிறது.
AutoCAD வகுப்புகள் 24 வாரங்களுக்கு நடைபெறும். AutoCAD கைப்பிரதியும் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் AutoCAD Certified User (ACU) என்ற பொது தேர்வுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர். பயிற்சியின் இறுதியில், மாணவர்கள் நிச்சயமாக கடினமான வரைபடங்களையும் எளிதில் வரையும் அளவிற்கு மாறிவிடுகின்றனர்.




